ஸ்டாலின் கைது – கண்டித்து சேலத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கைது

370 0

கட்சராயன் ஏரியைப் பார்வையிட சென்ற ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, சேலத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் எருமைப்பட்டியில் உள்ள சுமார் ஏழரை ஏக்கர் பரப்பளவு கொண்ட கட்சராயன் ஏரியை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பார்வையிட இருந்தார்.
இந்த நிலையில், அதிமுகவினரும் ஏரிகளைத் தூர் வார களத்தில் இறங்கியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து ஸ்டாலின் ஏரியைப் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டது.

சேலத்தை நோக்கி வந்த ஸ்டாலின் கோவையில் கைது செய்யப்பட்டார்.
கோவை, கணியூர் சுங்க சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு, ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சேலம், சங்ககிரி அருகே உள்ள கொங்கணாபுரம் பிரிவு சாலையில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 1000 பேர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

500க்கும் மேற்பட்டோர் சங்ககிரியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a comment