ஊவா மாகாணத்தில் நிலத்தாழ்வு – நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வெளியேற்றம்

259 0

பண்டாரவளை, தியத்தலாவை ஆகிய பகுதிகளில் நேற்று பெய்த மழை காரணமாக பண்டரவளை திக்கராவை பிரதேசத்தில் நிலத்தாழ்வு அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக அந்த பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையத்தின் பதுளைக் கிளை அறிவித்துள்ளது.

உமாஓய வேலைத்திட்டம் காரணமாக பூமியில் ஏற்பட்டுள்ள வெடிப்பில் இருந்து நீர் வெளியேறியதை அடுத்து, இந்த அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

அங்குள்ள சுமார் 150 குடும்பங்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமை மையம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் நேற்று இரவு 9 மணி வரையில் தற்காலிக பாதுகாப்பு மையமான, பிந்துனுவெள இளைஞர் மத்தியநிலையத்தில் 26 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மாத்திரமே பிரவேசித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மறுப்பு தெரிவித்து, பதுளைக் கொழும்பு பிரதான வீதியில் திக்கராவ பிரதேசத்தில் வீதியை மறித்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தியதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இரவு 11 மணி அளவில் மக்கள் மீண்டும் மக்கள் தங்களின் இல்லங்களுக்கு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, தியதலாவை பிரதேசத்தை ஊடறுத்து வீசிய கடும் காற்றின் காரணமாக, அந்த பகுதியைச் சேர்ந்த 25 வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மழையுடன் ஏற்பட்ட கடும் காற்றின் காரணமாக இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment