சூரிய மண்டலத்துக்கு வெளியில் உள்ள துணைக்கோள் ஒன்றை விண்ணாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த துணைக்கோளானது, நெப்டியுனின் அளவை ஒத்ததாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது வியாழன் கிரகத்தை ஒத்த அளவான மற்றுமொரு கிரகத்தை சுற்றி வலம் வருவதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
நாசாவின் கெப்லர் தொலைநோக்கி ஊடாக இந்த துணைக்கோள் அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஹபல் தொலைநோக்கி ஊடாக எதிர்வரும் ஒக்டோபர் மாதம்முதல் இதனை மேலதிக ஆய்வுக்கு உட்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் நாசா அறிவித்துள்ளது.

