இயற்கைப் பசளைக்கு – பொது மக்களிடமிருந்து இருந்து கருத்துக்களைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை

1051 39

இயற்கைப் பசளைக்காக புதிய தரத்திற்கான திருத்தச் சட்டமூலத்திற்கு தற்பொழுது பொது மக்களிடமிருந்து இருந்து கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 15ஆம் திகதி வரை இதற்கான கருத்துக்களை முன்வைப்பதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அல்லது அதன் இணையத் தளத்தில் இந்தத் திருத்தச் சட்ட மூலம் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகர திண்மக் கழிவுகளைப் பயன்படுத்தி விவசாயத் துறைக்குத் தேவையான இயற்கைப் பசளையை தயாரிக்கும் வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதே இதன் நோக்கமாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment