மாகாண சபைத் தேர்தலுக்கு ஒக்டோபர் 2 இல் வேட்பு மனு கோரப்படும்- மஹிந்த

7141 0

சப்ரகமுவ, வட மத்திய மற்றும் கிழக்கு ஆகிய மாகாண சபைகளுக்கான தேர்தல் வேட்புமனு  எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி வௌியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி பிரதேசத்தில் இன்று (22) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதேவேளை, உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதற்கான அனுமதி கிடைக்கும் வரையில் உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடாத்த முடியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment