நிதிக் கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது

369 0

நிதிக் கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகத்தில் மூன்று பேர் ஹொரணை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாணந்துறை பொலிஸ் சட்ட அதிகாரமுள்ள பிரிவினருக்கு கிடைத்த தகவலின் படி மேற்கொண்ட சுற்றி வளைப்பில் மோட்டார் சைக்கிளில் 240 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் படி கிடைத்த தகவலின் படி மற்றுமொருவர் கைது செய்யப்பட்டதுடன், அந்த சந்தேகநபரால் ஹொரணை பிரதேசத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் 31 இலட்சத்து 63,580 ரூபா கொள்ளையிடப்பட்டது தெரிய வந்துள்ளது.

சந்தேகநபர்களிடமிருந்து துப்பாக்கி ஒன்று, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களும் பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் ஹொரணை பிரதேசத்தில் வசிக்கும் நபர்கள் என்பதுடன், அவர்கள் இன்று ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Leave a comment