இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 30 தமிழக கடற்றொழிலாளர்கள் இந்த மாதத்தில் மாத்திரம் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஐந்து தடவைகளில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவித்துள்ளன.
இலங்கை கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்ட 8 தமிழக கடற்றொழிலாளர்கள் பருத்தித்துறை கடற்பரப்பில் நேற்று கைதுசெய்யப்பட்டனர்.
இதற்கு முன்னதாக, இந்த மாதத்தில் நான்கு சந்தர்ப்பங்களில் 22 தமிழக கடற்றொழிலாளர்கள் கைதுசெய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

