கிளிநொச்சியில் 24 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 83 ஆயிரம் பேர் வரட்சியால் பாதிப்பு

269 0
தற்போது நிலவி வரும் கடும் வரட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் சுமாா் 24 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 83 ஆயிரம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா் என கிளிநொச்சி மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற வரட்சியை எதிர்கொள்வது தொடர்பான விசேட கூட்டத்தின் போதே  இத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
இதில் கரைச்சி பிரதேச செயலகத்தில் 42 கிராம அலுவலர்கள் பிரிவுகளில் 9327 குடும்பங்களைச் சேர்ந்த 32632 பேரும்,
கண்டாவளை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த  16 கிராம அலுவலர் பிாிவுகளில்  5767 குடும்பங்களைச் சேர்ந்த 20181  பேரும்,
பூநகரி பிரதேச செயலகத்தில்  19 கிராம அலுவலா் பிரிவில்  5354 குடும்பங்களைச் சேர்ந்த 18654  பேரும்,
 பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த 18 கிராம அலுவலா் பிாிவுகளில்  3464  குடும்பங்களைச் சேர்ந்த  11624  பேரும் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனா் என  மாவட்டச் செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 32 கிராமங்களுக்கு 3914 குடும்பங்களுக்கு பிரதேச  சபைகள் மற்றும்  பிரதேச  செயலகங்களினால்  குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது வரைக்கும் கால்நடைகள் வரட்சியினால் பொிதும் பாதிக்கப்படவில்லை, எனவும் ஆனால் இந்த வரட்சியான கால நிலை தொடர்ந்தும் நீடித்தால் கால்நடைகள் மற்றும் வான் பயிர்களும் பாதிக்கும் நிலைமை ஏற்படுவதோடு. மக்களுக்கான குடி நீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு  கூட நீரை பெற்றுக்கொள்ள முடியாத நிலையும் ஏற்படும் எனவும் இன்றைய கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் புதுமுறிப்பு மற்றும் வன்னேரி குளங்களை தவிர ஏனைய குளங்களில் நீர் மட்டம் மிக மோசன அளவில் குறைந்துள்ளது எனவும் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் சுட்டிக்காட்டப்பட்டது.
மாவட்ட அரச அதிபர் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் கிளிநொச்சி மேலதிக அரச அதிபர்  சத்தியசீலன், மாவட்ட அனா்த்த முகாமைத்துவ பிாிவின் பிரதிப் பணிப்பாளர் சூரியராஜ், பிரதேச  செயலாளா்கள் பிரதேச சபையின் செயலாளா்கள், நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள், மற்றும்  திணைக்களங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்

Leave a comment