கொழும்பு துறைமுகத்தில் 50 சீனி கொள்கலன்கள் மூடப்பட்டுள்ளன

260 0
கொழும்பு துறைமுகத்தில் சந்தேகத்துக்குரிய முறையில் உள்ள 50 சீனி கொள்கலன்கள் சட்டரீதியாக மூடப்பட்டுள்ளன.
குறித்த கொள்கலன்களை திறந்து பார்ப்பதற்காக நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றுக்கொண்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த அனைத்து கொள்கலன்களும் பிரேஸிலிலிருந்து கொண்டுவரப்பட்டதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
320 கோடி ரூபா பெறுமதியான கொக்கேய்ன் இருந்த கொள்கலன் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சீனி கொள்கலனிலிருந்து 218 கிலோ கொக்கேய்ன் மீட்கப்பட்டமை தொடர்பில் 7 சந்தேகத்துக்குரியவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment