ஹம்பாந்தோட்டை – ஹங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்துக்குரியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அவரும் குறித்த கைக்குண்டுத் தாக்கதலில் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஹங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற குறித்த கைக்குண்டுத் தாக்குதலில் 17 பேர் காயமடைந்தனர்.
தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, குறித்த இடத்தில், அருகிலிருந்தவர்கள் கூடியிருந்தபோது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் அங்குனுகொலபெலஸ்ஸ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

