கிரிக்கட் தொடர்பாக ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் விரைவில் கடிதம் அனுப்புவேன் – அர்ஜூன ரணதுங்க

230 0

கிரிக்கட் தொடர்பாக ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் விரைவில் கடிதம் அனுப்பவுள்ளதாக என்று கௌரவ கனிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்கள் தெரிவித்துள்ளார். 

மேலும் தெரிவிக்கையில் ´எனது மிகப்பெரிய பொறுப்பு என்னவென்றால் அழிவிலிருந்து கிரிக்கட்டை காப்பதே. இதுதொடர்பாக கடிதமொன்றை எதிர்வரும் வாரங்களில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் சமர்ப்பிக்க நான் முடிவெடுத்துள்ளேன்.

ஜனாதிபதியோ, பிரதமரோ இதுபற்றி என்னிடம் எதுவும் இதுவரை கேட்கவில்லை. ஆனால் மக்கள் எதிர்பார்க்கின்றனர் நான் எதாவது இதுதொடர்பாக செய்யவேண்டும் என்று. ஆதனால் நான் மக்களுக்கு பொறுப்பு கூற வேண்டிய தேவையுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ்; கிரிக்கட் தொடர்பான சூதாட்டங்கள் இடம்பெறுகின்றமையானது கிரிக்கட்டின் அழிவை காட்டுகிறது.

மகிந்த ராஜபக்கஷ காலத்தில் கிரிக்கட் விளையாட்டில் அரசியல் தலையீடு காணப்பட்டது. ஆனால் அதன் தாக்கம் பெரிதாக இல்லை. காரணம் முன்னாள் கிரிக்கட் அமைச்சர் மகிந்தாநந்த அலுத்கமகே கிரிக்கட் சூதாட்டத்துக்கு இடம்கொடுக்கவில்லை. ஆனால் தற்போது அரசாங்கம் கிரிக்கட் விளையாட்டுத்துறையை சீரமைக்க வேண்டும்.

நான் முன்பு குறிபிட்டது போல 2011ஆம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டி முன்னதே தீர்மானிக்கப்பட்டது என்று. காரணம் நிறைய விடயங்கள் என்னை சந்தேகிக்க வைத்தது. இதுதொடர்பாக மக்களுக்கும் சந்தேகம் நிலவுகின்றது. யாராவது சிபாரிசு செய்தால் நான் இலங்கை கிரிக்கட் சபையை பொறுப்பேற்க தயாராக உள்ளேன் என்று அமைச்சர் தெரிவித்தார்.

Leave a comment