இலங்கைக்கான இரண்டாம் தவனைக் கடனுக்கான அனுமதி வழங்கப்பட்டு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி

363 0

புதிய உள்நாட்டு வருமான வரிச் சட்டமூலத்தின் காரணமாகவே, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான இரண்டாம் தவனைக் கடனுக்கான அனுமதி வழங்கப்பட்டதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு 167.2 மில்லியன் அமெரிக்க டொலர் இரண்டாம் கட்ட கடனுக்கான அனுமதி வழங்கப்படுள்ளது.
உள்நாட்டு வருமான வரி சட்டமூலம் தாமதமடைந்ததன் காரணமாகவே இது தாமதமடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, முன்னாள் நிதி அமைச்சரான மஹிந்த ராஜபக்ஷ கடந்த 2006 ஆம் ஆண்டு நாட்டு மக்களுக்கு வழங்கிய வரிச்சலுகை அனைத்தையும், நீக்கி மக்கள் மீது வரிச்சுமையை சுமத்தவே புதிய வரிச் சட்டமூலம் உருவாக்கப்படுவதாக பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Leave a comment