தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை – ராஜித்த சேனாரத்ன

237 0

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்பதை அரசாங்கம் ஏற்று கொள்வதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
காணாமற்போனோர் விடயம், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் ஆகிய பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாதுள்ளன.

இதுதவிர அரசியல் தீர்வும் அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவில்லை.
இவ்வாறான அடிப்படை விடயங்கள் தொடர்பான முடிவுகள் இல்லாத நிலையில், அனைத்தும் வெற்றியளித்துவிட்டதாக தம்மால் கூறமுடியாது என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.
அரசாங்கம் எதைச் செய்தாலும், அது தொடர்பில் ஏனைய சக்திகளின் செயற்பாடுகளையும் நாட்டுக்குள் சமநிலைக்கு கொண்டுவரவேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment