அரசியல் கைதிகள் தொடர்பான வழக்கு தொடுக்கும் விடயத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பணிகள் தாமதமாவம் – ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார

415 0

அரசியல் கைதிகள் தொடர்பான வழக்கு தொடுக்கும் விடயத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பணிகள் தாமதமாவதாக அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அமைச்சரிடம் இதன்போது கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அவர்,
அரசியல் கைதிகளை அச்சமின்றி விடுதலை செய்து ஏனையவர்ளுக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டும்.
வழக்கும் தொடரும் பணிகளை விரைவாக மேற்கொள்வதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்திருந்தது.
எனினும், இதுவரை அந்தப் பணிகள் இடம்பெறவில்லை.
வழக்குத் தொடரும் நடவடிக்கைகள் மிகவும் தாமதம் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

Leave a comment