அஞ்சல் திணைக்களத்திற்கு சுமார் 20 பில்லியன் ரூபா நட்டம்

1092 0
கடந்த 5 வருட காலப்பகுதியில் அஞ்சல் திணைக்களத்திற்கு சுமார் 20 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் திணைக்களத்தினால் வெளியிடப்படப்பட்டுள்ள பணியக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரங்களுக்கு அமைய கடந்த வருடத்தில் மாத்திரம் 661 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அது மாத்திரமன்றி அந்த வருடத்தில் 133 மில்லியன் ரூபா வருமான குறைவு ஏற்பட்டுள்ளது.
கடந்த 5 வருடங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடமே மிக குறைந்த வருமானம் ஈட்டிய ஆண்டாக பதிவாகியுள்ளது.

Leave a comment