கர்ப்பிணித்தாய்மார்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் விசேட நிகழ்ச்சித்திட்டம்

24897 0

கர்ப்பிணித்தாய்மார்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் விசேட நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்ச்சி திட்டம் கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது, மத்திய மாகாணத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணித்தாய்மார்களுக்கு இந்த உலர் உணவு கூப்பன் மற்றும் போசனைப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதனிடையே, திடீர் விபத்தில் உயிரிழந்த தமது புதல்வனின் இதயத்தை, இருதய சத்திர சிகிச்சைக்காக வழங்கிய உடுநுவரவைச் சேர்ந்த ஐ பி நந்தசேன மற்றும் இந்திரா கல்யாணி ஆகியோரை ஜனாதிபதி சந்தித்தார்.

இதன்போது, அவர்கள் மேற்கொண்ட குறித்த உன்னத செலுக்காக அவர்களுக்கு ஜனாதிபதி தமது நன்றிகளை தெரிவித்தார்.

Leave a comment