மோசடியாளர்களை பாதுகாத்து அரசாங்கத்தை கொண்டு நடத்த வேண்டிய அவசியம் இல்லை

1354 12
ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுப்பட்டவர்களை பாதுகாத்து அரசாங்கத்தை கொண்டு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட இதனை தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தெரிவு செய்யப்பட்ட காலம்முதல் பல்வேறு கோணங்களில் அரசாங்கத்திற்கு நெருக்கடிகள் விளைவிக்கப்பட்டு வருகின்றன.
இருந்த போதிலும் அரசாங்கம் பொருளாதாரம் உள்ளிட்ட விடயங்களில் பல வெற்றிகளை பதிவு செய்தது.
எனவே அரசாங்கத்திற்கு ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுப்பட்டவர்களை பாதுகாத்து அவர்களுக்கான தண்டனைகளை இல்லாமல் செய்வதற்கான அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை என பந்துலால் பண்டாரிகொட குறிப்பிட்டார்.

Leave a comment