வடக்கு கிழக்கு இணைவது அவசியம் – சீவி விக்னேஸ்வரன்

380 0

vikki-415x260தமிழ் மொழி நிலைபெறவும் தமிழ் மக்களின் கலை கலாசாரம் அழியாமல் இருப்பதற்கும் வடக்கு கிழக்கு இணைப்பு அவசியம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண பொது நூலகத்தில் நேற்று நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது கூட்டத்தொடரிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்
வடக்கு கிழக்கு மாகாணத்தின் ஒருங்கிணைப்பை வலியுறுத்த வேண்டும், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பாரம்பரியமாகத் தமிழ் பேசும் மக்களின் தாய் மொழி நிலைக்கவேண்டும், அவர்களின் கலாசாரம் மேம்ப்படுத்தப்பட வேண்டும் ஆகிய 3 தீர்மானங்கள் ஏகமனதான தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, அரசியல் அமைப்பு திருத்தத்தில் உள்வாங்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் வடக்கு தலைவர்கள் மத்தியஸ்தமான நிலைப்பாடு ஒன்றிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் லக்மன் கிரியல்ல இதனை தெரிவித்தர்.
அரசியல் அமைப்பில் உள்வாங்கப்பட வேண்டிய கொள்கைகள் தொடர்பிலேயே தற்பொது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகிறன.
இந்த அரசியல் அமைப்பு தொடர்பில் சிலர் பொய்யான பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கையின் பௌத்த மதத்தையோ சிங்கள இனத்னையோ பாதிக்கும் வகையில் எந்த ஒரு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட மாட்டாது.
வடக்கு மாகாண தலைவர்கள் இலங்கையில் சமஸ்டி முறை ஆட்சி முறையை கோரவில்லை.
மாகாண சபைகளை வலுப்படுத்துமாறே கோரியதாக அமைச்சர் லக்மன் கிரியல்ல குறிப்பிட்டார்.