மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்துள்ளார்.
இதேவேளை, வடக்கின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பாக வவுனியாவில் உள்ள அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர், இலங்கையில் தாம் மேற்கொண்ட கண்காணிப்புகள் குறித்து கொழும்பில் நாளைதினம் நடத்தவுள்ள ஊடக சந்திப்பில் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள உள்ளார்.
இதேவேளை, கண்காணிப்புகள் குறித்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், அடுத்த வருடம் மார்ச் மாதம் முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

