சர்வதேச இளைஞர் பரிசளிப்பு வேலைத்திட்டம்

232 0

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தேசிய இளைஞர் பரிசளிப்பு பிரிவு வழிநடத்தும், ‘எடிம்ரோ கோமகன்’ சர்வதேச இளைஞர் பரிசளிப்பு நிகழ்ச்சித்திட்டம், நாடு பூராகவும் உள்ள பாடசாலைகள், கல்வி நிறுவனங்கள், மற்றும் ஆசிரியர் பயிற்சி கலாசாலைகளில் செயற்படுத்துவதற்காக, தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சு மற்றும் கல்வி அமைச்சுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்திடப்பட்டது.

தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சு சார்பில் செயலாளர் எம்.ஐ.எம்.ரபீக் மற்றும் கல்வி அமைச்சு சார்பில் செயலாளர் சுனில் ஹெட்டிஆராட்ச்சி ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டனர்.

இந்நிகழ்வில் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் இராஜங்க செயலாளர் சாந்த பண்டார, தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் மேலதிக செயலாளர் (இளைஞர் விவகார) கலாநிதி கே.ஏ.எஸ்.கீரகல, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின், தேசிய இளைஞர் பரிசளிப்பு பிரிவின் தேசிய பணிப்பாளர் திஸ்ச சமரசிங்க, கல்வி அமைச்சின் பணிப்பாளர் (விடயம் தொடர்பான) வை.ஏ.என்.டி. யாபா, தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் மேலதிக செயலாளர், தினேஷ் விதானகமாச்சி, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தேசிய இளைஞர் பரிசளிப்பு பிரிவின் உதவிப் பணிப்பாளர் ஷாரிகா லியனஆராச்சி மற்றும் அப்பிரிவின் நிறைவேற்று செயலாளர் திரு.பீ.எஸ். கௌதமதாச ஆகியோர் பங்குப்பற்றினர்.

Leave a comment