பயங்கரவாதத்தை தடுக்க சார்க் நாடுகள் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்-ரணில்

219 0

பயங்கரவாதத்தையும், கூட்டான குற்றச் செயல்களையும் தடுக்க சார்க் நாடுகள் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை ஆயுதம் ஏந்திய பயங்கரவாதத்தை வெற்றி கொண்டுள்ளது. பயங்கரவாதத்திற்கான அடிப்படை காரணங்களுக்கு தீர்வு வழங்குவதில் யுத்தத்தின் பின்னராக காலப்பகுதியில் ஏற்பட்டுள்ள சவாலான பணி பற்றி கொழும்பில் இன்று ஆரம்பமான செயலமர்வில் பிரதமர் உரையாற்றினார்.

சார்க் அமைப்பு நாடுகளின் 8 ஆவது சட்டம் மாற்று ஒழுங்கு அமைச்சர்கள் பங்குகொள்ளும் மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமானது.

பாகிஸ்தான், இந்தியா உட்பட பிராந்தியத்தின் சில இடங்களில ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளின் செயற்பாடுகளினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பாரம்பரிய முறைகளில் இருந்து விலகி சைபர் தாக்குதல் இணையத்தாக்குதல் போன்றவற்றின் ஊடாகவும் பயங்கரவாத செயற்பாடுகள் இடம்பெறுவதாக இங்கு பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் காணிகளை விடுவித்தல், காணாமல் போனவர்கள் தொடர்பான சட்டத்தின் மூலம் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காத வகையில் ஜனநாயகத்தையும், சமாதானத்தையும் ஸ்தாபிக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment