காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்காமைக்கு இராணுவமே காரணம்-இரா.சம்பந்தன்

289 0

தாயகப்பகுதியில் கையளிக்கப்பட்டும்கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வுகான முற்பட்டால் போரில் ஈடுபட்ட ஸ்ரீலங்கா இராணுவத்தினர் தண்டிக்கப்படுவார்கள் என்ற கருத்து தென்னிலங்கையில் உள்ள சிங்கள மக்கள் மத்தியில் பரப்பப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவரும்தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்த கருத்தே நல்லாட்சி அரசாங்கத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றத்தில்  நிறைவேற்றப்பட்டுள்ள நிலையிலும்,  அதனை அமுல்படுத்த காலதாமதப்படுவதாக இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக மூன்று மாதங்களுக்கு மேலாக  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை   எதிர்க்கட்சி தலைவரும்தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நேரடியாக பார்வையிட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்திலே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவினர்களது போராட்டத்திற்கு விரைவாக தீர்வொன்றை முன்வைக்கமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தாம் நேரடியாக அழுத்தம் கொடுத்துள்ளதாக இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

Leave a comment