ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அதிகாரத்தை கொண்ட வடமத்திய மாகாண சபையின் அவைத் தலைவர் டீ.எம்.ஆர் .சிறிபாலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்வரும் 18ம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சிலரால் 8 குற்றச்சாட்டுக்களுடன் கூடிய நம்பிக்கையில்லா பிரேரணை அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்து.
அதன்படி , நிகழ்ச்சி நிரலில் அது உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் ஐக்கிய தேசிய கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் அவைத்தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

