இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீளப்பெறுவதே, தமிழக அரசாங்கத்தின் முதன்மையான நிகழ்ச்சித் திட்டம் என்று, தமிழக நிதி மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் டி.ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.மாநில சட்டசபையில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்படுவதை தடுக்க வேண்டும்.
இதற்கு 1970ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சத்தீவின் அதிகாரத்தை மீண்டும் இந்தியா பெற வேண்டும்.
இதற்கான நடவடிக்கைகளையும், அழுத்தத்தம் வழங்குவதையும், தமிழக அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

