தம்புள்ள விகாரை விவகாரம்: அரசாங்கம் தலையீடு செய்வது தவறு – எஸ்.பி.

429 0

தம்புள்ள விஹாரை விவகாரங்களில் அரசாங்கம் தலையீடு செய்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

குறித்த விஹாரை அஸ்கிரி மாஹாநாயக்க தேரரின் கீழ் இயங்கி வரும் ஒர் விஹாரையாகும். விஹாரையின் பணிகள் விஹாராதிபதியின் தலைமையின் கீழ் இயங்குவதற்கு இடமளிக்கப்பட வேண்டும். மாறாக அஸ்கிரிய பீடாதிபதிக்கும் விஹாராதிபதிக்கும் அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய வகையில் செயற்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

அதிகளவான தொல்பொருட்கள் காணப்படும் தம்புள்ள ரஜமஹா விஹாரையின் விடயங்களில் எவரும் தலையீடு செய்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்

Leave a comment