பணிப்புறக்கணிப்பை கைவிட்ட இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள்!

383 0

இலங்கையின் புதிய கடற்றொழில் சட்டத்தை நீக்கக் கோரி இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் மேற்கொண்ட காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் தடுத்த வைக்கப்பட்டுள்ள தமிழக 69 கடற்றொழிலாளர்களையும், 156 படகுகளையும், விடுதலை செய்ய கோரியும் இந்த காலவரையற்ற பணிநிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்தையில் உடன்பாடு எட்டியதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் சனிக்கிழமை, கடற்றொழிலாளர்கள் கடற்றொழிலுக்கு செல்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையின் புதிய கடற்றொழில் சட்டத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்தியப் பிரதமரை வலியுறுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நேரில் சென்று இந்தியப் பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும் என இந்திய கமியூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநிலச் செயலாளர் ஆர். முத்தரசன தெரிவித்துள்ளார்.

Leave a comment