துளை – துன்ஹிந்த நீர் வீழ்ச்சியின் அருகாமையில் உள்ள வன பகுதியில் மரம் ஒன்றில் தொங்கிய நிலையில்
நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வன பகுதியிற்குள் காதல் ஜோடி ஒன்று சென்றுள்ள நிலையில், சடலம் இருப்பதனை அறிந்து உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டுள்ள நபர் கடந்த 3 ஆம் திகதி காணாமல் போன பண்டாரவளை – தென்கெபில்லேவெல பிரதேசத்தினை சேர்ந்த நபர் என அறியவந்துள்ளது.
வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ள 31 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
குறித்த நபரின் உறவினர்கள் சம்பவம் குறித்து இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். ‘ குறித்த நபரின் மகனுக்கு நீரிழிவு நோய் இருந்தது. ஒவ்வொரு நாட்களும் இன்சுலின் ஏற்றப்பட்டது. இது குறித்து அவர் பெரும் மனக் கவலையுடன் இருந்தார். வேறு எந்த பிரச்சினையும் அவருக்கு இருக்கவில்லை” என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அறியவந்துள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

