களுத்துறையில் இன்று பல பிரதேசங்களில் 16 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை

376 0

பரிமரிப்பு நடவடிக்கை காரணமாக களுத்துறை மாவட்டத்தில் பல பல பிரதேசங்களில் இன்றைய தினம் 16 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமமைப்புச் சபை இதனைக்கு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி இன்று காலை 8.00 மணிமுதல் இரவு 12.00 மணிவரை இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

இதன்படி, வாத்துவ, வஸ்கடுவ, பொதுபிட்டிய, மொரந்துடுவ, கட்டுகுறுந்த, நாகொட, பெந்தொட்ட, பயாகல மற்றும் வடக்கு மற்றும் தென் களுத்துறை பிரதேசங்களில் இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

இதனுடன், பொம்புவல, மக்கோன, களுவோமோதர, மொரகல்ல, தர்கா நகர், அளுத்கம மற்றும் பிலமினாவத்தை ஆகிய பிரதேசங்களிலும் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

Leave a comment