மகிந்தவை குற்றம் சாட்டும் தயாசிறி

375 0
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்படுமாறு, முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவே சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுக்கு கூறியதாக அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
ஆனால் ஆறு மாதங்களின் பின்னர் மகிந்த ராஜபக்ஷ அதற்கு முரணான கருத்துக்களை வெளியிட ஆரம்பித்தாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
குருணாகலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் தலைவராக யார் நியமிக்கப்பட்டாலும் அவருடன் இணைந்து கட்சியை முன்கொண்டுச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைமைப் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பலவந்தமாக பெற்றுக் கொள்ளவில்லை.
அவர் கட்சியில் இருந்து இடைவிலகிச் சென்றாலும், ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து புதிய கட்சியை தொடங்காமல், பொதுவேட்பாளராக இருந்து, மீண்டும் சுதந்திர கட்சியுடனேயே இணைந்து அதன் தலைவராக செயற்பட்டு வருகிறார்.
எனவே அவருக்கு ஆதரவளித்து முன்செல்ல வேண்டிய கடமை தமக்கு இருக்கிறது என்றும் அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

Leave a comment