உயர்தர பரீட்சை ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பம்

224 0

2017 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சை ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இம்முறை பரீட்சையில் பாடசாலை பரீட்சாத்திகள் 2 லட்சத்து 37 ஆயிரத்து 943 பேர் தோற்றவுள்ளனர்.

இதனுடன் தனிப்பட்ட பரீட்சாத்திகள் 77 ஆயிரத்து 284 பேர் இந்த பரீட்சையில் தோற்றவுள்ளதாக அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

பாடசாலைக்கு கிடைக்கப்பெற்றுள்ள அனுமதி பத்திரங்கள் எந்தவொரு காரணத்திற்காகவும் அதிபர்கள் வைத்துக் கொள்ள முடியாது எனவும், விரைவாக குறித்த அனுமதி பத்திரங்களை பரீட்சாத்திகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை உயர் தர பரீட்சை, நாடு பூராகவும் உள்ள 2 ஆயிரத்து 230 பரீட்சை மத்திய நிலைங்களில் இடம்பெறுள்ள நிலையில், 305 ஒருங்கிணைந்த மத்திய நிலைங்களின் கீழும் இடம்பெறவுள்ளது.

இதற்காக 28 ஆயிரம் அலுவலகர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

பரீட்சை தொடர்பில் பிரச்சினைகள் நிலவினால்  0112 78 42 08, 0112 78 45 37 அல்லது 0113 18 83 50 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.

இதனுடன் 1911 என்ற அவசர தொலைபேசி இலக்கம் ஊடாகவும் பரீட்சை தொடர்பில் பிரச்சினை நிலவினால் வினவ முடியும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave a comment