டெங்கால் காணிக்கு வரி

320 0

மேல் மாகாணத்தில் அபிவிருத்தி செய்யப்படாமல் கைவிடப்பட்டுள்ள காணிகளுக்கு அதன் பெறுமதியில் இரண்டு சதவீதத்தை வரியாக அறவிடப்படவுள்ளது.

டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருப்பதாக மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

கைவிடப்பட்ட காணிகளிலேயே அதிகமாக டெங்கு நுளம்பு உற்பத்தியாவது குறித்த முறைப்பாடுகள் தமக்கு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கான அறிவுறுத்தல் உள்ளுராட்சி மன்றங்ளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment