ஆலமரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் பல்கலைக்கழக மாணவர்கள் காயம்

612 0

கண்டலம் குளத்தில் உள்ள குளியற் தடாகத்தில் ஆலமரத்தின் கிளையொன்று முறிந்து விழுந்ததினால் ஏற்பட்ட விபத்தில் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

இன்று பிற்பகலில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த மாணவர்கள் தம்புள்ளை ஆரம்ப மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருவாதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

24 பேர் கொண்ட பல்கலைக்கழக மாணவர் குழுவொன்று சுற்றுலாச் சென்றிருந்தபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

Leave a comment