அரிசி கொள்வனவு தொடர்பில் இலங்கை அதிகாரிகள் கொண்ட குழு பாகிஸ்தானுக்கான உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மெற்கொண்டுள்ளது.
இலங்கைக்கு சுமார் 2 லட்சம் மெட்ரித்தொன் அரியை இறக்குமதி செய்வதற்காக இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளுடன் அண்மையில் பேச்சுவாத்தைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையிலேயே குறித்த குழு தற்போது பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு இறக்கமதி செய்யப்படவுள்ள அரிசி வகைகள் தொடர்பாக அவர்கள் அங்கு மேற்பார்வை ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.
இதனிடையே, எதிர்வரும் 12 திகதி அந்த குழுவினர் மியன்மாருக்கான விஜயத்தையும் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

