உமா ஓய திட்டம் தொடர்பாக ஆராய்வதற்காக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஸ தலைமையில் குழுவொன்றை நியமிக்க ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.
குறித்த குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களான பத்ம உதேசாந்த, ரஞ்சித் சொய்ஸா மற்றும் டளஸ் அழகப்பெரும ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் தொடர்பாக கடந்த அரசாங்கத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு குறித்து இந்தக் குழு ஆராயும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.

