இலங்கை படையினருக்கு அமெரிக்காவில் பயிற்சி

238 0

தமது நாட்டில் எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் பயிற்சிகளில் பங்கேற்க இலங்கை படையினருக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்த முழு ஒத்துழைப்பை வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

விடைபெற்றுச் செல்ல உள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் ரொபட் நொக்ஸ் ரோஸ் பாதுகாப்பு படைப் பிரதானி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்கவை நேற்று சந்தித்தபோது இதனைத் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு படைகளின் பிரதானியாக பதவியேற்றதன் பின்னர், மஹேஸ் சேனாநாயக்க சந்தித்த முதலாவது வெளிநாட்டுப் பிரதிநிதி அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் ஆவார்.

அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்க அதிகாரிகளுக்கு இராணுவத்தினர் வழங்கிய ஒத்துழைப்பையிட்டு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் பணியாற்றிய காலப் பகுதிகளில் பூரண ஒத்துழைப்புடன் ஆற்றிய சேவைக்காக, அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகருக்கு, பாதுகாப்பு படைகளின் பிரதானி நன்றி தெரிவித்துள்ளதாக இராணுவத் தகவலகள் தெரிவித்துள்ளன.

Leave a comment