அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையிலான சந்திப்பு ஜேர்மனில் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்ற பின்னர், அமெரிக்க மற்றும் ரஸ்ய ஜனாதிபதிகளுக்கு இடையில் இடம்பெற்ற முதலாவது சந்திப்பு இதுவாகும்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் இடம்பெற்றதாக கூறப்படும் ரஸ்ய தலையீடு குறித்து இதன்போது இருவரும் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஸ்யா தலையிட்டது என்ற குற்றச்சாட்டின் மூலம் பாதிப்படைந்துள்ள தொடர்புகளை சரிசெய்ய விரும்புவதாக அமெரிக்க மற்றும் ரஸ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

