இலங்கை அரசாங்கத்தின் கடற்றொழில் திருத்தச் சட்டத்துக்கு தமிழக முதலமைச்சர் எதிர்ப்பு

227 0

இலங்கை அரசாங்கத்தின் கடற்றொழில் திருத்தச் சட்டத்துக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் கடிதமொன்றை அனுப்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எல்லை தாண்டி கடற்தொழிலில் ஈடுப்பட்டால் 2 வருடம் சிறை தண்டனையும், பெரும் தொகையான அபராதமும் விதிக்கப்படும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த அறிவித்தல் தமிழக கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மிக மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் அடுத்த கட்ட நடவடிக்கையாகும்.

எனவே, இலங்கையின் இந்த அறிவித்தலானது, இருநாட்டு கடற்தொழிலாளர்களின் பிரச்சினையை, நட்பு ரீதியில் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க நினைக்கும் முயற்சிக்கு மிகவும் பின்னடைவாக அமையும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

Leave a comment