அர்ஜூன் அலோஸியஸ், சாட்சியாளரை அச்சுறுத்தினார் – ஜனாதிபதி ஆணைக்குழு

351 0

பெர்ப்பச்சுவல் ட்ரெஸரிஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அர்ஜூன் அலோஸியஸ், சாட்சியாளர் ஒருவருக்கு தொலைபேசியூடாக அச்சுறுத்தியதாக ஜனாதிபதி ஆணைக்குழுவால் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இது குறித்து நடவடிக்கை எடுக்க சட்ட ஏற்பாடுகள் உள்ளதா என்பது தொடர்பாக ஆராயுமாறு சட்டமா அதிபருக்கு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பெர்ப்பச்சுவல் ட்ரெஸரிஸ் நிறுவனம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியத்துக்கும் இடையில் பிணைமுறி விநியோகத்தின்போது இடையீட்டு தரப்பாக செயற்பட்ட தனியார் வங்கியொன்றின் நிதிப் பிரிவின் பிரதி முகாமையாளர் ஒருவர் நேற்றைய தினம் ஆணைக்குழுவில் மூன்றாவது முறையாகவும் சாட்சியமளித்தார்.

பெர்ப்பச்சுவல் ட்ரெஸரிஸ் நிறுவனம் மற்றும் தமது வங்கி தொடர்பாக ஆணைக்குழுவில் சாட்சியமளித்த பின்னர், அர்ஜுன் அலோஸியஸ் தம்மை சந்திக்க வேண்டும் என கூறியதாக சாட்சியாளர் தெரிவித்துள்ளார்.

எனினும், முதலில் தாம் அதை நிராகரித்ததாகவும், பின்னர் மீண்டும் விடுத்த கோரிக்கைக்கு அமைய, அர்ஜுன் அலோஸியஸை கடந்த 30 ஆம் திகதி சந்தித்ததாகவும் சாட்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்துவரும் இரண்டு வார்ங்கள் தீர்மானமிக்கது என்பதால், தமக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அர்ஜுன அலோஸியஸ் சாட்சியாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், இரகசியங்கள் வெளியாவதை தவிர்க்கும் வகையில் குறித்த உரையாடல்களில் பெரும்பாலானவை வட்ஆப் றூயவளயிp மூலமாக மேற்கொள்ளப்பட்டதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சாட்சியமளிக்கும்போது சாட்சியாளர் அச்சமடையும் பாவத்தைக் காட்டியதாகவும், இதன்போது, உண்மையை வெளிப்படுத்தாமல் இருப்பது தண்டணைக்குரிய குற்றமாகும் என உயர்நீதிமன்ற நீதியரசர் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment