மற்றுமொரு அமெரிக்க உயரதிகாரி இலங்கை வருகிறார்.

322 0

International+Global+Zero+Summit+Against+Nuclear+Np2atNboodHlஅமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பொருளாதார மற்றும் வர்த்தகம் தொடர்பான உதவி ராஜாங்க செயலாளர் சார்ள்ஸ் எச் ரிவ்கின் (Charles H. Rivkin) இலங்கை வரவுள்ளார்.
அமெரிக்க ராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பொன்றில் இந்தவிடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் கொழும்பில் அரசாங்க உயர்மட்ட தலைவர்களை சந்திக்கவுள்ளார்.
அத்துடன் இரண்டு நாடுகளுக்கிடையேயான வர்த்தக மற்றும் முதலீடுகளை அதிகரித்து கொள்வது தொடர்பான கலந்துரையாடல்களிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.