நல்லிணக்கம் நாட்டில் அடிமட்டத்திலிருந்து வியாபிக்க வேண்டும்!

331 0

இலங்கையை நல்லிணக்கத்துடனான நாடாக மாற்ற வேண்டியது அனைவரினதும் கடமை என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

இன்று (07) நாடாளுமன்றத்தில் வைத்து அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் அசோக்க பிரியந்தவினால் புத்தளம் மாவட்டத்தை தேசிய மறுவாழ்வு மற்றும் நல்லிணக்க மாவட்டமாக பெயரிட திட்டமிடப்பட்டுள்ளதன் தனிப்பட்ட யோசனை மீது கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த யோசனை புத்தளம் மாவட்டத்திற்கு மாத்திரம் போதுமானது அல்ல. தற்போது நல்லிணக்கம் நாட்டில் அடிமட்டத்திலிருந்து வியாபிக்க வேண்டும். பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கான எங்களுக்கு இருந்தது. பொதுமக்களுடன் நாடும் அபிவிருத்தியடைய வேண்டியது அத்தியாவசியமாகும்.

Leave a comment