ஆரம்பநிலை வகுப்புகளுக்கான ஆசிரியர்களுக்கு விசேட பயிற்சிகள்

348 0

ஒவ்வொரு வருட இறுதிக்கு முன்னதாகவும் ´டெப்´ கணிணிப்பொறிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்று (07) பாராளுமன்றத்தில் வைத்து உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார். முன்பள்ளி கல்வியை மேம்படுத்தும் முகமாக முறையான வேலைத்திட்டத்தை தயாரிப்பது தொடர்பாக கொண்டுவரப்பட்ட தனிப்பட்ட உறுப்பினர் யோசனைக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டார். ஆரம்பகல்வியை மேம்படுத்த பல முக்கிய வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.

ஆரம்பநிலை வகுப்புகளுக்கான ஆசிரியர்களுக்கு விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டு பணியில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டார்.

Leave a comment