தொழில்களை வழங்கும் போது அரசியல்வாதிகளை பின்தொடர்ந்து செல்லும் முறைமையை நிறுத்த வேண்டும்.
பட்டதாரிகளுக்கு ஏற்ற தொழில் சந்தையொன்றை தயாரிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷான் வித்தானகே தெரிவித்துள்ளார். நேற்று (07) பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த யோசனையை முன்வைத்தார். யோசனையை முன்வைத்து உரையாற்றிய அவர், அரசாங்கம் என்ற வகையில் கல்வி தொடர்பில் தேசிய கொள்கையொன்றை உருவாக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
பல்கலைக்கழகத்தில் இருந்து வரும் பட்டதாரிகளில் விஞ்ஞான பாடவிதானங்களை பின்பற்றியவர்களுக்கு தொழில் வழங்குவதில் பிரச்சினை இல்லை. பட்டம் பெறுபவர்களில் 60 வீதமானவர்கள் கலைத்துறை சார்ந்தவர்களாகவர். அவர்களுக்கு தொழில் பெற்றுக்கொடுப்பதில் நெருக்கடி உள்ளது. அதற்கான வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

