மகிந்த மீண்டும் கட்சியின் தலைவர் – தீர்ப்பு ஓகஸ்ட் 3ஆம் திகதி

339 0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கட்சியின் தலைவராக மீண்டும் நியமிக்க வேண்டம் என்ற விடயம் குறித்து தெரிவிக்கப்பட்ட ஆரம்ப ஆட்சேபனை குறித்த தீர்ப்பு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 3ஆம் திகதி வழங்கப்படும் என கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த விடயத்தினை தொடர்வதற்கு ஏற்ற அடிப்படை தன்மை எதுவும் இல்லை என்ற ஆட்சேபனையினை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் சட்டதரணியூடாக வெளிப்படுத்தியிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினை கட்சியின் தலைவராக நியமிக்க வேண்டும் என்ற நீதி மன்ற மனு, கே.டி. அருண பிரியசாந்த மற்றும் அசங்க நந்தனவினால் தாக்கல் செய்யப்பட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோர் எதிராளிகளாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Leave a comment