இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளும் ளுக்கு ஆலோசனை!

10032 31

கொழும்பு நகரின் முச்சக்கர வண்டிகளில் தனிமையில் பயணிக்க வேண்டாம் என கொழும்பில் அமைந்துள்ள அமெரிக்கா தூதரகம் இந்நாட்டிற்கு வருகை தரும் அமெரிக்க பெண்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

இந்நாட்டு , முச்சக்கரவண்டி சாரதிகளினால் பெண்கள் பல்வேறு வகையான பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகுவதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக , விசேடமாக இரவு நேரங்களில் முச்சக்கரவண்டிகளில் பயணம் செய்யும் போது , தமது பயண விபரங்கள் தொடர்பில் உறவினர்களுக்கு அறிவிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் , கொழும்பில் உள்ள முச்சக்கரவண்டியொன்றில் ஏறுவதற்கு முன்னர் அதன் சாரதி மற்றும் வாகன இலக்கத்தை புகைப்படம் எடுத்துக் கொள்ளுமாறும் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளும் அமெரிக்க பெண்கக்கு இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் மேலுமொரு ஆலோசரனையும் வழங்கியுள்ளது.

Leave a comment