உதயங்க வீரதுங்கவின் கடவுச்சீட்டுக்களை ரத்துச் செய்ய உத்தரவு

14319 260

ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்கர வீரதுங்கவின் இராஜதந்திர கடவுச்சீட்டையும் மற்றும் மேலுமொரு கடவுச்சீட்டையும் ரத்துச்செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை முதன்மை நீதவான் லங்கா ஜயரட்ன இந்த உத்தரவை இன்று  பிறப்பித்தார்.

காவற்துறை நிதிக்குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றில் இது தொடர்பில் விடயங்களை தௌிவுபடுத்தியுள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தி உதயங்க வீரதுங்க பல்வேறு நாடுகளுக்கு பயணித்துள்ளதாக காவற்துறை நிதிக்குற்றத்தடுப்பு பிரிவு நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளது.

மிக் விமானம் கொள்வனவின் போது இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில்  முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்கவிற்கு எதிராக காவற்துறை நிதிக்குற்றத்தடுப்பு பிரிவால் விசாரணையொன்று மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் , அவரை கைது செய்வதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றினால் சர்வதேச பிடியாணையொன்றும் அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment