பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களை பதிவு செய்வதற்கான கால எல்லை நீடிப்பு

232 0

பல்கலைக்கழகங்களில் முதலாம் ஆண்டுக்கு இணைத்துக் கொள்ளப்படும் புதிய மாணவர்களை பதிவு செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த கால எல்லை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

நாளை நிறைவடையைவிருந்த இந்த கால எல்லை அடுத்த மாதம் 7 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள அஞ்சல் சேவையாளர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழக நுழைவுக்காக தகுதிப் பெற்றுள்ள புதிய மாணவர்களில் பலருக்கு பதிவு செய்வதற்கு தேவையான பதிவெண் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என தெரியவந்துள்ளது.

பல்கலைக்கழகங்களில் பதிவு செய்தல் இணையம் ஊடாக இடம்பெறும் நிலையில், அதற்கு பதிவெண் தேவையாகும்.

பல்கலைக்கழகங்களில் பதிவு செய்தல் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் வினவுவதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் பொது தொலைபேசி இலக்கங்கள் இரண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

0112695302 மற்றும் 0112695301 ஆகிய இலக்கங்கள் ஆகும்.

இந்த இலக்கங்களுக்கு அழைத்து பரீட்சை இலக்கம் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை முன்வைத்து குறித்த பதிவெண்ணை பெறமுடியும் என அந்த ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment