வட மாகாண சபையின் புதிய அமைச்சர்கள் சத்தியபிரமாணம் (காணொளி)

562 0

வடக்கு மாகாணத்தின் விவசாய அமைச்சராக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும், கல்வி அமைச்சராக கந்தையா சர்வேஸ்வரனும் புனர்வாழ்வு சமூக சேவை அமைச்சராக அனந்தி சசிதரனும் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில், ஆளுநர் ரெஜினோல்ட் கூரே மற்றும் வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் முன்னிலையில்; சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
வடக்கு மாகாண கல்வி மற்றும் விவசாய அமைச்சர்கள் கடந்த 14ஆம் திகதி இராஜினாமா செய்துகொண்டதையடுத்து, வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குறித்த அமைச்சுப் பதவிகளை நிர்வகித்து வந்தார்.
இந்நிலையில், நேற்றையதினம் வடக்கு மாகாண முதலமைச்சரால், கல்வி அமைச்சராக கந்தையா சர்வேஸ்வரனும், புனர்வாழ்வு, சமூக சேவை மற்றும் மகளிர் அமைச்சராக அனந்தி சசிதரனும் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
வடக்கு மாகாண விவசாய அமைச்சை வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தனது அமைச்சில் இணைத்து கொண்டு விவசாய அமைச்சிலுள்ள புனர்வாழ்வு சமூக சேவை, மகளிர் மற்றும் கூட்டுறவு அமைச்சை அனந்தி சசிதரனிடம் ஒப்படைத்துள்ளார்.

இதனையடுத்து குறித்த அமைச்சர்கள்; வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில், ஆளுநர் மற்றும் முதலமைச்சர் முன்னிலையில் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வில், முதலமைச்சர் சார்பு வடக்கு மாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
வடக்கு மாகாண சபையின் கல்வி கல்வி அமைச்சராக இருந்த தம்பிராசர குருகுலராசா தமிழரசுக்கட்சியை சேர்ந்த மாகாண சபை உறுப்பினராவார். அவரது இராஜினாமாவின் பின்னர் அவரது பதவி தமிழரசுக்கட்சி உறுப்பினர்களுக்கே வழங்கப்படவேண்டியது நியதி. இதனடிப்படையில் வடக்கு மாகாண முதலமைச்சரால் வடக்கு மாகாண சபையில் தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றீயிட்டிய அனந்தி சசிதரனுக்கு வடக்கு மாகாண முதலமைச்சரினால் புனர்வாழ்வு சமூக சேவை அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கும் வடக்கு மாகாண முதலமைச்சருக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது தமிழரசுக்கட்சியின் தலைவரிடம் அனந்தி சசிதரனின் அமைச்சு நியமனம் தொடர்பாக கருத்து கேட்ட போது தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அதனை மறுத்துள்ளார். இந்நிலையிலும் வடக்கு மாகாண முதலமைச்சர் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அனந்தி சசிதரனை நியமனம் செய்துள்ளார்
கந்தையா சர்வேஸ்வரன் அரசியல் இளம் முதுகலைமாணி அரசியல் பட்டதாரி என்பதுடன், சர்வதேச உறவுகளில் கலாநிதி பட்டத்தையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment