உமாஓய பிரச்சினைக்கு காரணம் தற்போதைய அரசாங்கம் என குற்றச்சாட்டு

3325 41
உமாஓய வேலைத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு காரணம் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளே என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பு – கோட்டை ஸ்ரீ சம்புத்தாலோக விகாரையில் நேற்று இடம்பெற்ற சமய நிகழ்வுகளைத் தொடர்ந்து அவர் ஊடகவியலாளர்களிடம் இதனை தெரிவித்தார்.
பொதுமக்கள் இன்று பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
சுதந்திரம் முற்றாக இல்லாமல் போயுள்ளது.
பாரியளவில் மாணவர்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment