புதிய அரசியல் யாப்பில் அதிகாரப் பகிர்வு தொடர்பில் இணக்கம் – பிரதமர்

239 0

புதிய அரசியல் யாப்பில் அதிகாரப் பகிர்வு தொடர்பில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில்விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசியல் யாப்பு வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகள் கடந்த வாரம் சந்திப்ப நடத்தி தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

இதில் சிலவிடயங்களில் அனைத்து தரப்பும் இணங்கியுள்ளன.

அவற்றில் மாகாண சபை அதி கூடிய அதிகாரங்களை பகிர்வதற்கும், முதலமைச்சருக்கு மேலதிக அதிகாரங்களை பகிர்வதும் உள்ளடங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வழிநடத்தல் குழுவினால் பெரும்பான்மை மறறும் சிறுபான்மை கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன.

இந்த கருத்துக்கள் தொகுக்கப்பட்டு இறுதிப்படுத்தப்பட்டு நாடாளுமன்றத்தில் அறிக்கையாக முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்படவுள்ளது.

அதேநேரம் செனட் சபைகளின் உருவாக்கம் தொடர்பில் அனைத்து கட்சிகளுக்கு இடையிலும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

மேலும் 13ம் திருத்தச் சட்டத்தின் கீழ் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்ற அடிப்படையில், பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

இதுத் தவிர நிதிச்சட்டங்கள், நீதி சட்டங்கள், புதிய தேர்தல் முறைமை உள்ளிட்டவை தொடர்பில் இணக்கத்தை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெறுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Leave a comment