இலங்கையின் இராஜதந்திர பொறிமுறையில் மாற்றம்

235 0

ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட சில வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் பல, விரைவில் மூடப்படும் என்று, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, இன்றுத் தெரிவித்தார்.

குறித்த இராஜதந்திர நிலையங்களின் பெறுபேறுகளையும், அந்நிலையங்களைத் தொடர்ந்தும் வைத்திருப்பதன் காரணங்களையும் அறிந்த பின்னர், இவை தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என, கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது, இராஜதந்திரப் பொறிமுறை தொடர்பாக விளக்கமளிக்கையில்
அவர் கூறினார்.

“சில தூதரகங்களை, நாங்கள் மூடவேண்டியிருக்கிறது. ஏனெனில், அவற்றின் மூலமாக, எந்தவிதப் பயனும் இல்லை என்பது, அண்மைக்காலத்தில் கண்டறியப்பட்டுள்ளது”

“வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்ட இராஜதந்திரத்தில் ஈடுபடுவதற்கு, அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதனால், வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்ட இராஜதந்திர உறவுகளைக் கட்டியெழுப்பி, உலகத்தை இணைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இந்தப் புதிய கொள்கை தொடர்பாக, ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் செப்டெம்பர் 4ஆம் திகதி இடம்பெறவுள்ள கூட்டத்துக்கு, வெளிநாடுகளிலுள்ள அனைத்து இராஜதந்திர நிலையங்களின் பிரதானிகளும், அழைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், வெளிநாடுகளில் பணிபுரிந்த, இராஜதந்திர நிலையங்களின் பிரதானிகள் மூவர், இதுவரையில் மீள அழைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார். ஆனால், அவர்களின் பெயர்களையோ அல்லது விவரங்களையோ வெளியிடுவதற்கு அவர் மறுத்து விட்டார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ், தேசிய லொத்தர் சபையைக் கொண்டு வந்தமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர், தீய எதிர்பார்ப்புகளைக் கொண்ட ஒரேயொரு நபர் மாத்திரமே, இந்த நடவடிக்கைக்கு எதிராகக் குரலெழுப்புவதாகத் தெரிவித்தார்.

“நிதி இழப்புகளால் பாதிக்கப்பட்டிருந்த தேசிய லொத்தர் சபையை, இலாபம் தரும் நிறுவனமாக நான் மாற்றினேன் என்பதால் தான், அவர்கள் சத்தமிடுகிறார்கள் என நினைக்கிறேன். மறைந்த லலித் அத்துலத்முதலியின் காலத்தில், தேசிய பாதுகாப்பு அமைச்சின் கீழ் மகாபொல காணப்பட்டிருந்த சந்தர்ப்பமும், கடந்த காலங்களில் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் அமைச்சின் கீழ் தேசிய லொத்தர் சபை

Leave a comment